கம்பஹா, தொரணகொட பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய எஸ்.நதிசா சந்தீபனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் சடலத்தை காரில் எடுத்துச் சென்று வெல்லம்பிட்டி, கொஹிலவத்தை பிரதேசத்திலுள்ள களனி ஆற்றில் திங்கள் (21) வீசியுள்ளதாக பெமுல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளில் வெளியான தகவல்கள்
*சந்தேக நபரும் உயிரிழந்த பெண்ணும் சுமார் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளதுடன், அப்பெண்ணின் வீட்டிற்கு சந்தேக நபர் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
*கடந்த 16 ஆம் திகதி குறித்த பெண் சந்தேக நபரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
*இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தேகநபர் குறித்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
*அதன்பின்னர் பெண்ணின் சடலத்தை காரில் எடுத்துச் சென்று களனி ஆற்றில் வீசியுள்ளார்.
*கடந்த 18ஆம் திகதி வெல்லம்பிட்டி காவல்துறையினரால் குறித்த சடலம் மீட்கப்பட்டது.
*மகளைக் காணவில்லை என யுவதியின் பெற்றோர் வெல்லம்பிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்க சென்ற போது சந்தேக நபரும் அவர்களுடன் சென்றுள்ளார்.
*அதற்கமைய, சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.