இலங்கையின் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனமான டயலொக் தமது கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.
சர்வதேச இயக்க கட்டணங்கள் அதிகரித்திருப்பதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்கள் மற்றும் சர்வதேச குறுந்தகவல்களுக்கான கட்டணங்கள் 19ம் திகதி முதல் அதிகரிக்கப்படுகிறது.