எரிபொருள் வரிசை மூன்றாவது உயிரையும் காவு கொண்டது.
மீரிகம பகுதியில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்றிருந்த ஒருவர் உயிரிழந்தார்.
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 76 வயதான அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே கண்டி மற்றும் கடவத்தை ஆகிய இடங்களில் கடந்த இரண்டு தினங்களில் இரண்டு பேர் வரிசையில் நின்றிருந்த நிலையில் உயிரிழந்தனர்.
3 நாட்களில் இவ்வாறு இடம்பெறும் மூன்றாவது மரணம் இதுவாகும்.