நிட்டம்புவ – ஹொரகல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த குறித்த இளைஞருக்கும், சந்தேக நபருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதனால் சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் குறித்த இளைஞரை தாக்கி கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞர், வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த முச்சக்கரவண்டி சாரதி தலைமறைவாகி இருந்த நிலையில், அவரை இன்று கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.