அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்துவதற்கான யோசனைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, புத்தாண்டு காலத்துக்குள் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் என தெரிவித்த அவர், நாட்டு அரிசியை 140 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள அரிசியை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.