Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு!

ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு!

யுக்ரைன் மீது ரஷ்யா இன்று 22 ஆவது நாளாகவும் போர் தொடுத்து வருகிறது. யுக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனால், யுக்ரைன் – ரஷ்ய படைகளிடையே தீவிர போர் நீடித்து வருகிறது.

இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இதற்கிடையில், தங்கள் நாட்டில் ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டிய யுக்ரைன், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரியும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நெதர்லாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது.

அதில், யுக்ரைன் மீது நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் யுக்ரைன் மீது நடத்திவரும் தாக்குதலை ரஷ்யா நிறுத்தலாமென எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், யுக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும், தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரஷ்யா நிராகரித்துள்ளது. இதன் மூலம், யுக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

Keep exploring...

Related Articles