பிரித்தானியாவுக்கு பிரவேசிக்கும் பயணிகளுக்கான கொவிட் தொடர்பான அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இனி கோவிட் பரிசோதனையின்றி பிரித்தானியாவுக்குள் நுழைய முடியும்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் பரவல் காரணமாக பிரித்தானியாவில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதற்கமைய, பிரித்தானியாவில் இருந்து ஏனைய நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவோர், அந்த நாடுகளில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை கவனத்திற் கொள்ள வேண்டும் என அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.