இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இலங்கை கிரிக்கெட் அணி நேற்று (17) நாடு திரும்பியது.
இந்தியாவின் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 3.30 அளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணிக்கு எதிரான அணி டெஸ்ட் தொடரையும், இருபதுக்கு தொடரையும் இந்திய அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.