கனடாவும், அவுஸ்திரேலியாவும் தமது சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.
தற்போது இலங்கையில் கடனட்டை மோசடி , விலையேற்றம், வெளிநாட்டினரை குறிவைத்து போலியான பொருட்கள் விற்கப்படுகின்றமை போன்ற காரணங்களால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜைகளை வாய்மொழி மற்றும் உடல்ரீதியாக துன்புறுத்துவது பற்றிய தொடர் அறிக்கைகளையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இலங்கையில் உள்ள தெருக்களில் சுற்றுலாப் பயணிகளை தனியாக பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முடிந்தால் இலங்கைக்கு செல்லும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு செல்வதாக இருந்தால் தமக்கு தேவையான மருந்து பொருட்களையும் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.