கொழும்பிலிருந்து பதுளைக்கு சென்ற உடரட்ட மெனிகே ரயிலில் இருந்து விழுந்து, எகிப்த்து நாட்டவர் ஒருவர் உயிரிழந்தார்.
அகமது முகமது அப்துல் ஹமிட் என்ற பெயருடைய 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமையன்று உடரட்ட மெனிக்கே தொடருந்தில் பயணித்த அவர், பட்டிப்பளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நடைமேடையில் இருந்து தவறி விழுந்து, படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.