யுக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து பிரஜைகளின் உறவினர்கள் 4,000 பேருக்கு விசா வழங்க நியூசிலாந்து தீர்மானித்துள்ளது.
தற்போது நியூசிலாந்தில் நிரந்தரமாக வசிக்கும் யுக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 1600 நபர்களின் உறவினர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
அந்நபர்களுக்கு முதலில் நியூசிலாந்தில் வேலை செய்வதற்கும், நியூசிலாந்து பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கும் இரண்டு வருட கால விசா வழங்கப்படும்.
யுக்ரைனில் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நியூசிலாந்தில் பாதுகாப்பாக வாழ்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.