Wednesday, April 23, 2025
26 C
Colombo
அரசியல்நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இன்று நிலைமையே வேறு - சம்பிக்க ரணவக்க

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இன்று நிலைமையே வேறு – சம்பிக்க ரணவக்க

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இன்று டீசல் லீற்றரின் விலை 126 ரூபாவாகவும், பெட்ரோல் லீற்றரின் விலை 130 ரூபாவாகவும் மாத்திரமே இருந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

“உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது. தற்போது மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98 டொலர்களாகும். நல்லாட்சியின் போது டொலரின் பெறுமதி 180 ரூபாவாக இருந்தது. இந்த விலையை எடுத்துக் கொண்டால் இன்று டீசல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 130 ரூபாவாக இருந்திருக்கும்.

அப்படியானால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டுடன், எரிபொருளுக்கான கலால் வரியின் மூலம் இந்த அரசு மக்களிடம் இருந்து எவ்வளவு பணத்தை மோசடி செய்து கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்.

வருவாய் மிகக் குறைவாக இருக்கும் நேரத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் வரியுடன் சேர்த்து 120 ரூபாவுக்கு மேல் இலாபம் ஈட்டப்படுகிறது.

மேலும், அரசின் தவறான நிதி நிர்வாகத்தால், மறுபுறம் மக்கள் இதற்கு இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. அத்துடன், இலங்கையில் இவ்வாறு பெட்ரோல், டீசல், மசகு எண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாது.அதற்கு ஒரு நிலையான வேலைத்திட்டம் நாட்டுக்கு தேவை. அதைச் செய்ய இந்த அரசு தவறிவிட்டது.

எனவே, எரிவாயு, பெட்ரோல், டீசல் வரிசைகளில் தவிக்கும் மக்கள், தங்களின் வாழ்வுரிமைக்காக போராட முன்வர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles