தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கி.மீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்றிரவு இலங்கை நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 7.3 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் 60 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானில் பல பகுதிகளிலுள்ள கட்டடங்கள் குலுங்கியதாகவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பல பாகங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.