Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியை விமர்சித்தமைக்கு ரூபவாஹினி அறிவிப்பாளர் பதவி நீக்கம்?

ஜனாதிபதியை விமர்சித்தமைக்கு ரூபவாஹினி அறிவிப்பாளர் பதவி நீக்கம்?

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக பணியாற்றிய பாரமி நிலேப்தா ரணசிங்க உடனமுலாகும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சித்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பதிவினால் தனக்கு ரூபவாஹினி வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரிவிதின அருணெல்ல, நுக செவன, சுசர தெஹன போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்களின் அன்பைப் பெற்ற அவர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டும் ஆவார்.

பரமி ரணசிங்கவின் பதவி நீக்கம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதுவரையில் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles