3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிவாயுவினை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடனுக்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 6 மில்லியன் அமெரிக்க டொலர் இன்றைய தினத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என குறித்த நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.