இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய சுமார் 8,670 மில்லியன் ரூபாவை பொது திறைசேரியில் இருந்து செலுத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து கடனாக எரிபொருளைப் பெறுவதற்கு இத்தொகையை இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டியுள்ளது.
மின்சார சபை தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால், பொது திறைசேரியில் இருந்து இந்த தொகையை செலுத்துவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
இலங்கை மின்சார சபை தற்போது கடும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன், வாடிக்கையாளர்களிடம் இருந்து 44 பில்லியன் ரூபா கிடைக்க வேண்டியுள்ளது.