Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி விசேட உரை

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி விசேட உரை

பாரம்பரிய விவசாய நாடான இலங்கையை, அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கமாகும் என் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறு போகத்துக்கான சேதனப் பசளையை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் நீண்டகாலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வெற்றிகரமான முடிவுகளை எட்டியுள்ளன.

அவை தொடர்பான அறிவையும் தரமான உற்பத்திகளையும் விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம், எதிர்பார்த்த பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், வாரத்திற்கு 2 தடவைகள் அரசாங்க அதிபர்கள் தலைமையில் உரக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இரவு 8.30 க்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles