தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிக்க வேண்டும் என தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேங்காய் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (16) இடம்பெறவுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.