பாணந்துறை குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிது மல்ஷிதவின் நெருங்கிய உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை தெற்கு விசேட அதிரடிப்படையின் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களிடமிருந்து மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத சொகுசு ரக மகிழுந்தொன்றும், பல்வேறு வங்கிகளுக்கு சொந்தமான 8 வங்கி அட்டைகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.