கிழக்கு கொங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பல கிராமங்களை குறிவைத்து ஐந்து நாட்களாக குறித்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாத போராளிகள் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தம்மை பாதுகாக்க பாதுகாப்பு படையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், 300க்கும் மேற்பட்ட துருப்புக்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அத்துடன், இரண்டு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கொங்கோ இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.