மாத்தளையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தர மாணவர்கள் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மாணவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்களின் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காதல் விவகாரம் ஒன்றினால் இந்த தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபர் மாத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.