வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று காலை வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 2 கட்டங்களாக அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகவுள்ளதாக
அந்த சங்கம் அறிவித்திருந்தது.