தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், கடந்த மாதம் 52.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்ததென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான விரிவடைதல் இந்த மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
எனினும், உற்பத்தி, கொள்வனவுகளின் இருப்பு, தொழில்நிலை என்பன வீழ்ச்சியடைந்த அதேவேளை, வழங்குநர் விநியோக நேரம், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் நீட்சியடைந்தது.
பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது, பெப்ரவரி மாதம் 51.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, பணிகள் துறை முழுவதும் சிறிதளவான வளர்ச்சியொன்றினை எடுத்துக்காட்டியது.
புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் ஆகிய துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இந்தச் சிறியளவான அதிகரிப்புக்கு துணையளித்திருந்ததென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.