Thursday, October 23, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பேரணி

விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பேரணி

விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து இந்த பேரணியை முன்னெடுத்தனர்.

மல்லாகத்திலிருந்து வலிவடக்கு பிரதேச சபை வரை பேரணியாகச் சென்று இவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், தற்போதைய பொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, வலிவடக்கு பிரதேச சபையின் சகல பிரதேச சபை உறுப்பினர்களும் சைக்கிளில் பிரதேச சபை அமர்வுக்கு பேரணியாக சென்று எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles