Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்3 வயதான மகனால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் தாய் பலி!

3 வயதான மகனால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் தாய் பலி!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில் 3 வயதான மகனால் தவறுதலாக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் தாய் பலியான சம்பவம் பதிவாகியுள்ளது.

டீஜா பென்னட் எனப்படும் 22 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று குறித்த பெண் தனது மகனை மகிழுந்தின் பின் இருக்கையில் அமர வைத்து விட்டு, அவர் மகிழுந்தை ஓட்டுவதற்கு தயாராகியுள்ளார்.

இதன்போது அந்த சிறுவன், மகிழுந்தின் பின் இருக்கையில் இருந்த தனது தந்தையின் துப்பாக்கியை கையில் எடுத்து விளையாடியதில், மகிழுந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பென்னட்டின் முதுகுப்பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது.

இந்நிலையில், அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரின் கணவரான ரோமல் வாட்சன்(23) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கியை சட்டவிரோதமாக மற்றும் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் கொண்டு சென்றதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 2015 மற்றும் 2021 க்கு இடைபட்ட காலத்தில், 2,070 குழந்தைகள் தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர், இதன் விளைவாக 765 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 90% வழக்குகளில் குழந்தைகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles