அரசியல் இலாபங்களுக்காக நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு நாட்டில் எந்த வகை மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இரத்மலானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.