எதிர்காலத்தில் தொடருந்துக் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், டீசல் விலை அதிகரிப்பு காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொள்ள நேரிட்டதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் தொடருந்து கட்டணத்தில் சிறிதளவு அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.