இம்மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரையான 8 மாத காலப்பகுதிக்கு தேவையான டீசல் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.
குறித்த பெறுகையை கொரல் எனேர்ஜி DMCC நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பெறுகையை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.