அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதி, மருதானை மற்றும் கொழும்பை சூழவுள்ள பல இடங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணியளவில் கொள்ளுப்பிட்டி வீதியில் இருந்து இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.