Tuesday, April 22, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபா பணம் வழங்க அனுமதி

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபா பணம் வழங்க அனுமதி

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குடும்பங்களின் வாழ்வினை மீள கட்டியெழுப்புவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதியமைச்சர் அலி சப்ரி, இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.

எதிர்கால சந்ததியினரின் நலன்களை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை கட்டுப்படுத்து வகையிலும் தற்போது வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கமைய அந்த குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு 17ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம், காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த அலுவலகத்தால் கண்டறிப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின், குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியை, ஒருமுறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles