நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நேற்றைய தினமும் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்த கனியவள கூட்டுதாபனத்தின் தலைவர், அதன் பலனை மக்களுக்குப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நேற்றைய தினம் 5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
இதற்கமைய ஒரு பீப்பாய் ப்ரெண்ட் ரக எண்ணிக்கையின் விலை 5.77 அமெரிக்க டொலர் வீழ்ச்சியடைந்து 106.90 அமெரிக்க டொலராக பதிவானது.