37,500 மெட்ரிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று இன்று (15) நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் தலா 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் விமானத்திற்கான எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல்களில் உள்ள எரிபொருளை தரையிறக்குவதற்கான நாணய கடிதங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் 30,000 மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்றும் இன்று அல்லது நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கான தட்டுப்பாட்டை குறைக்க முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.