உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 750 மில்லிலீற்றர் அதிவிஷேசம் மதுபான போத்தலின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக DCSL நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவ்வாறே, அதிவிஷேசம் வகை மதுபானம் 375 மில்லிலீற்றரின் (அரை) விலை 60 ரூபாவினாலும், 180 மில்லிலீற்றரின் (கால்) விலை 30 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான பியர்களின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.