கந்தானை மற்றும் வத்தளை பிரதேசங்களில் இரண்டு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தானை புனித சவேரியார் பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரு இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வத்தளை – ஹெந்தல வீதி பகுதியில் உள்ள வாகனங்களை பழுதுபார்க்கும் ஊழியர் ஒருவர் வாகனமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, கந்தசுரிதுகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.