பிரபல இந்திய கபடி வீரர் சந்தீப் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியின் போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத நான்கு நபர்களால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் அடைந்த கபடி வீரர் சந்தீப் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.