கடந்த 5 வருட கால பகுதியில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி அதிகரித்து பதிவாகியுள்ளது.
கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகத்துடன் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்வர் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
2019 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியினில் ஏற்றுமதி செய்யப்பட்டதனை விடவும் இந்த எண்ணிக்கை 23 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.