மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30-31 வீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 40 அடி கொள்கலனுக்கான போக்குவரத்துக் கட்டணமாக ஏறக்குறைய 200,000 ரூபாவை கப்பல் நிறுவனம் வசூலித்துள்ளது.
ஒரு பொருளை இறக்குமதி செய்வதற்கு சதுர அடிக்கு அறவிடப்படும் தொகை 6,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவை அண்மித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்தார்.
தற்போதைய சூழலில், உள்ளூர் ஆடைத் தொழில்துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிராமிய மக்கள் நாட்டுக்கு சுமையாக இல்லாமல் பல இயந்திரங்களைப் பயன்படுத்தி ஆடைத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.