Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெறுவது மற்றும் பல்வேறு மோசடிகள் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 15 சிறப்பு சுற்றுலா காவல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த புதிய சுற்றுலா காவல் நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடங்களுடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய தென் மாகாணத்தில் மிரிஸ்ஸ, நாரிகம ஆகிய இடங்களிலும் நுவரெலியா, பின்னவல மற்றும் எல்ல ஆகிய இடங்களிலும் இந்த விசேட சுற்றுலா காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இவை பிரதேச காவல் சுற்றுலாப் பணியகம் என பெயர் மாற்றப்படும் என சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles