அமெரிக்காவின் ஊடகவியலாளரும், திரைப்பட படைப்பாளருமான பிரண்ட் ரெனாவ்ட் (51) உயிரிழந்துள்ளார்.
யுக்ரைன் தலைநகர் கிவ் அருகிலுள்ள் இர்பென் பகுதியில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் மேலும் ஒரு நபர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.