எரிபொருள் விலையேற்றத்தின் அடிப்படையில், பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை, அதிகரிக்கவுள்ளதாக மாவட்ட பாடசாலை போக்குவரத்து சேவையின் தலைவர் ஹரிஸ்சந்திர பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பிரதான நகரங்களில் 80 கிலோமீற்றர் தூரத்திற்கான சேவைக்கு, மாதாந்தம் தற்போது அறவிடப்படும் தொகைக்கு மேலதிகமாக 1,000 ரூபா அறவிடப்படும்.
கிராமப்புறங்களில் 10 கிலோமீற்றர் தூரத்திற்கு 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.