யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு, சீனா உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக ரஷ்யா, சீனாவிடம் இராணுவ உதவிகளை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் கோரியதற்கு அமைய, சீனா ஆயுத உதவிகளை வழங்கினால் எதிர்காலத்தில் பல விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ரஷ்யாவின் இந்த கோரிக்கை தொடர்பில் தாம் இன்னும் அறிந்திருக்கவில்லை என வொசிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.