2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையை நடாத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பரீட்சை வினாத்தாள்களை அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடதாசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், அவற்றை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரணதரப் பரீட்சை கொவிட் தொற்று காரணமாக இவ்வாண்டு மே மாதம் 23 ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பரீட்சைக்கு சுமார் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சைகள் திணைக்களத்திடம் போதியளவு கடதாசிகள் கையிருப்பில் இருக்கவில்லை எனவும், அரச அச்சக கூட்டுத்தாபனத்திடம் கடதாசி பெற்றுக்கொண்டே பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.