மொனராகலை – எத்திமலை மகா வித்தியாலயத்தின் 62 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை பாடசாலையில் குளவி கூடு ஒன்று சரிந்து விழுந்ததில், இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் எத்திமலை கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் பாடசாலையின் அதிபரும் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.