Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரிக்கெட் பார்வையிட சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

கிரிக்கெட் பார்வையிட சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்டத்தில் உள்ள கிணற்றொன்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (13) மாலை 04.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவன் கல்வி கற்கும் பாடசாலையின் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிகெட் சுற்று போட்டியினை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தினால், குடும்பத்தினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, மரக்கறி தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உதட்டில் காயங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பாரதிதர்ஷன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles