Tuesday, April 22, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி 5 இந்திய மாணவர்கள் பலி!

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி 5 இந்திய மாணவர்கள் பலி!

கனடா – ஆண்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கனடாவுக்கான இந்திய தூதுவர் அஜெய் பிசாரியா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த மாணவர்கள் பயணித்த சிற்றுார்ந்து முன்னால் சென்ற கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக இந்திய தூதர் அஜெய் பிசாரியா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles