Friday, October 31, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து பிரித்தானியாவிலிருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி நடவடிக்கைகளுக்கு செலுத்துவதற்கு காணப்படும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தற்போது அடிப்படைத் தேவைகளில் பற்றாக்குறையை அனுபவித்து வருவதுடன், மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும், நாட்டில் குறுகிய பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என பிரித்தானிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் டெங்கு மற்றும் கோவிட் தொற்று காரணமாக குறுகிய அறிவிப்பில் விமானங்கள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles