Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்...

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (14) இடம்பெறவுள்ளது.

போட்டியில் 419 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், ஒரு விக்கெட்டை இழந்து 28 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில், சகல விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களையும், இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles