எதிர்காலத்தில் நாட்டில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
300 ரூபாவாக இருந்த ஒரு மெட்ரிக் டன் எரிவாயு தற்போது 900 ரூபாயை தாண்டியுள்ளது. மூன்று தசாப்தங்களில் உலகின் மிக உயர்ந்த எரிவாயு விலை இன்று பதிவாகியுள்ளது.
தற்போது எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைப் போல, எதிர்காலத்தில் எரிவாயு விலை அதிகரிக்கும் நிலையை தவிர்க்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.