Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து விலைகள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இரு நாட்களில் வெளியாகும்

மருந்து விலைகள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இரு நாட்களில் வெளியாகும்

டொலருக்கு நிகராக 60 அத்தியாவசிய ஒளடதங்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்பட உள்ளதாக ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்குள் விலை கட்டுப்பாட்டு சபையினால் புதிய விலை திருத்தம் வழங்கப்பட உள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நேற்றுமுன்தினம் 230 ரூபா வரையில் அதிகரித்ததை அடுத்து, ஒளடத இறக்குமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளித்து 50 சதவீத விலை அதிகரிப்பை கோரியிருந்தனர்.

இதன்படி ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் ஒளடத விலை கட்டுப்பாட்டு குழுவிற்கு அதனை முன்வைத்து, 20 சதவீத விலை அதிகரிப்புக்கு அனுமதியை பெற்றிருந்தது.

எனினும் நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 260 ரூபாய் வரையில் உயர்வடைந்தது.

எனவே, இதற்கு சமாந்தரமாக மீண்டும் விலை மீளாய்வை மேற்கொள்ள விலை கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles