தொலைபேசி மற்றும் துணைக்கருவிகளின் விலைகளை 30 வீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி சடுதியாக 58 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய விலை மாற்றப்பட்டியலை தமது சங்கத்தின் www.ccva.lk என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் சமித் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.